வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் எதிர்த்து வரும் புதிய வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி மத்திய அரசு திரும்ப பெற்றிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் மெத்தனபோக்கினால், இதுவரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ள அவர், மக்களுக்கு உணவளிப்பவர்களின் போராட்டத்தையும் வேதனையையும் பிரதமர் ஏன் புரிந்து கொள்ளவில்லை எனவும் சோனியாகாந்தி கேள்வி ஏழுப்பியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: