டெல்லியில் 40 நாளாக தொடரும் விவசாயிகள் போரட்டம்; விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 7ம் கட்ட பேச்சுவார்த்தை!

டெல்லியில் 40தாவது நாளாக நீடித்து வரும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மத்திய அரசு, இன்று விவசாயிகளுடன் 7ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்திடவுள்ளது. மத்திய அரசு அண்மையில் புதிதாக அமல்படுத்திய வேளாண்…

டெல்லியில் 40தாவது நாளாக நீடித்து வரும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மத்திய அரசு, இன்று விவசாயிகளுடன் 7ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்திடவுள்ளது.

மத்திய அரசு அண்மையில் புதிதாக அமல்படுத்திய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 26ம் தேதி முதல் புராரி மைதானத்திலும், சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளிலும் கடும் குளிர், மற்றும் மழையை பொருட்படுத்தாமல் போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுவரை நடைபெற்ற 6 கட்ட பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் 50 சதவீத கோரிக்கைகளுக்கு முடிவு காணப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 7வது கட்ட பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என விவசாய பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply