வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்க திட்டம்: மத்திய அரசு தகவல்!

வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு…

வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றி அடைந்துள்ள நிலையில் கோவாக்சின் உள்ளிட்ட இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்துகளை பொதுமக்களுக்கு வழங்குவது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இதுவரை, நாடு முழுவதுமுள்ள 719 மாவட்டங்களில் 57 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை 96 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply