கோவையில் நடைபெற்ற மத்திய அரசின் தேர்வில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட ஹரியானாவைச் சேர்ந்த 4 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இதனை தெரிவித்தார். பேட்டியின் போது அவர் மேலும் கூறியதாவது:
கோவையில் அண்மையில் நடைபெற்ற மத்திய அரசு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக ஹரியானாவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
—ரெ.வீரம்மாதேவி







