”மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை!” – டி.ஆர்.பாலு மக்களவையில் குற்றச்சாட்டு!

மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என டி.ஆர்.பாலு மக்களவையில் குற்றம் சாட்டியுள்ளார்.  இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் மக்களவையில் அவர் பேசியதாவது: தற்போது கூட்டப்பட்டிருப்பது ஒன்றும் சிறப்பு கூட்டம் அல்ல.…

மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என டி.ஆர்.பாலு மக்களவையில் குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் மக்களவையில் அவர் பேசியதாவது:

தற்போது கூட்டப்பட்டிருப்பது ஒன்றும் சிறப்பு கூட்டம் அல்ல. வழக்கமான ஒரு நாடாளுமன்றக் கூட்டம்தான் இது. எந்த ஒரு தேவையுமே இல்லாமல் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் பணம் செலவழித்து கட்டப்பட்டு திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஏன் முந்தைய கூட்டத் தொடர் நடத்தப்படவில்லை?

நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் முடிவடைந்து 76-வது ஆண்டு நடைபெறுகிறது. 75 ஆண்டுகால நிகழ்வுகளை நினைவுகூற வேண்டுமானால் கடந்த ஆண்டுதான் 2022-ம் ஆண்டுதான் செய்திருக்க வேண்டும்.இப்போது ஏன் நினைவு கூறுகிறோம்?

1962-ம் ஆண்டு திமுக நாடாளுமன்றத்தில் நுழைந்தது. அப்போது முதல் அனைத்து விவாதங்களிலும் திமுக பங்கேற்று வருகிறது. 1969-ல் பெரும்பான்மை இழந்த போது இந்திரா காந்தி அரசுக்கு திமுக ஆதரவு அறிவித்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை பறிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய செயல், ஏற்கனவே இருக்கும் புண்ணில் உப்பைக் கொட்டுகிற செயல். 1999-ல் நெருக்கடியான சூழலில் வாஜ்பாய் அரசுக்கு திமுக ஆதரவு அளித்தது. அப்போது அதிமுகவால் நெருக்கடியை சந்திப்பதாக வாஜ்பாயே கூறியிருந்தார். வாஜ்பாய் ஆட்சியில் பொக்ரான் அணுகுண்டு சோதனை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் திமுக ஆதரவு அளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, மணிப்பூர் மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை.

இவ்வாறு டி.ஆர். பாலு கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.