2026ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு நடிகர் விஜயின் ஜன நாயகன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜயின் கடைசி படம் என்பதால் இப்படத்தில் எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் உள்ளன. அதே போல நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தியும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று (ஜனவரி 9) வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த விஜயின் ஜனநாயகன் திரைப்படமானது தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல நாளை வெளியாக உள்ள சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கும் பல வெட்டுகளுடன் இன்று தான் தணிக்கை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய பாஜக அரசின் புதிய ஆயுதமாக தணிக்கை வாரியம் மாறியுள்ளதாக விமர்சித்துள்ளார்.
தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “CBI, ED, IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பாஜக அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்” என்று தெரிவித்துள்ளார்.







