கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவரது உறவினர் விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என கிட்டத்தட்ட 230க்கு மேற்பட்டோர் இடம் விசாரணை நடைபெற்றது.மேலும் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய உயிரிழந்த கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினர்கள், குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக இன்று, சசிகலா குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவரும், டிடிவி தினகரனின் நண்பருமாகிய நாமக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் தனிப்படை போலீசார் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சசிகலா குடும்பத்தில் நெருங்கிய தொடர்பில் உள்ளவர் என்பதால் கொடநாடு பங்களாவுக்குள் சென்று வந்திருப்பார் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மதியம் ஒரு மணி அளவில் ஆஜரான வழக்கறிஞர் செந்திலிடம் தனிப்படை போலீசார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.