வெளிநாட்டில் இருக்கும் மனைவியை வரவைக்க கணவன் செய்த கொடூரம்! கைது செய்து போலீசார் நடவடிக்கை!

வெளிநாட்டில் பணிபுரியும் மனைவியை வரவழைக்க, பெற்ற குழந்தைகளையே தாக்கி வீடியோ அனுப்பிய கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கோரஞ்சால் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சூர்யா, இவரது மனைவி…

வெளிநாட்டில் பணிபுரியும் மனைவியை வரவழைக்க, பெற்ற குழந்தைகளையே தாக்கி வீடியோ அனுப்பிய கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கோரஞ்சால் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சூர்யா, இவரது மனைவி ஜெயலட்சுமி. மலேசியாவில் பணியாற்றி வருகிறார். தனது இரண்டு மகள்களுடன வசித்து வரும் ரவி, வெளிநாட்டில் உள்ள மனைவியிடம் வேலையை விட்டு விட்டு குழந்தைகளை கவனிக்க சொந்த ஊருக்கு வருமாறு கூறியதாக தெரிகிறது.

மேலும் மனைவியை வரவழைக்க பெற்ற குழந்தைகளை கொடூரமாக தாக்கி வாட்ஸ்ஆப் மூலம் மனைவிக்கு வீடியோ அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த சேரம்பாடி போலீசார், பெற்ற குழந்தைகளை தாக்கிய கொடூர தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவின்படி, உதகை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளரிடம் 2 குழந்தைகளையும் ஒப்படைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.