முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பெற்றோர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட உதவி தலைமை ஆசிரியர்..!

புதுக்கோட்டை மாவட்டம், பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் 4 பேர் காவேரி அணையில் சிக்கி உயிரிழந்தததை அடுத்து, இன்று பள்ளி திறந்த உடன் உதவி தலைமை ஆசிரியர் பரிமளா மாணவிகளின் பெற்றோர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து 15 மாணவிகள் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக, கடந்த 15-ஆம் தேதி தொட்டியத்திற்கு சென்றனர். அங்கு போட்டியில் கலந்து கொண்டு விளையாடி முடித்துவிட்டு, வீடு திரும்பும் வழியில் கரூர் மாவட்டம் மாயனூர் காவேரி அணையில் மூழ்கி நான்கு மாணவிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து மாணவிகளை போட்டிகளில் கலந்துகொள்வதற்காக அழைத்துச் சென்று அஜாக்கிரதையாக நடந்துகொண்டதாக கூறி இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகிய மூன்று பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இச்சம்பவம் மாணவ-மாணவிகளை பாதிக்காமல் இருக்க பள்ளிக்கு கடந்த நான்கு நாட்களாக விடுமுறை அறிவித்து மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

இதனையும் படியுங்கள்: நியூஸ்7 தமிழின் ”ஊரும் உணவும்” திருவிழா : 4லட்சம் பேர் பங்கேற்பு

இந்த நிலையில் இன்று முதல் பள்ளி வழக்கம்போல் செயல்பட தொடங்கியுள்ளது. மாணவ – மாணவிகள் அனைவரும் பள்ளிக்கு வழக்கம்போல் வருகை தந்து, மனதில் கனத்த இதயத்தோடு உயிரிழந்த தங்களுடைய நான்கு தோழிகளுக்கும் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பிரேயர் நிகழ்ச்சியில் மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதன் பிறகு பள்ளி திறந்த உடன் உதவி தலைமை ஆசிரியர் பரிமளா, உயிரிழந்த மாணவ – மாணவிகளின் பெற்றோர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் பெற்றோர்கள், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த சில பெற்றோர்கள் மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு வருகை தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வித்துறை உயர் அதிகாரிகள் பெற்றோர்களிடம் பேசி இரு தரப்பினரையும் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மதுரை ஆதீனம் அருணகிரி நாதரின் வாழ்க்கைப் பயணம்

G SaravanaKumar

இந்தியாவில் தஞ்சமடைந்த ராஜபக்சே? – தூதரகம் விளக்கம்

Halley Karthik

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதியா?

EZHILARASAN D