புதிய உறுப்பினரின் வருகை……… – அட்லி பகிர்ந்த இனிப்பு செய்தி….!

இயக்குநர் அட்லி தன் மனைவி கருவுற்றிருக்கும் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. முதல் படத்திலேயே வெற்றி பதிவு செய்த அட்லீ அடுத்ததாக நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்தார். இவர்கள் கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கிய ‘ஜவான்’ படம்  ரூ.1,200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் இந்தியில் தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். தற்போது அட்லீ தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள அப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இயக்குநர் அட்லீ கடந்த 2014ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான நடிகை பிரியாவை திருமணம் செய்தார். இந்தத் தம்பதிகளுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் இயக்குநர் அட்லி தன் மனைவி கருவுற்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுய்ள்ள இன்ஸ்டா பதிவில் “எங்கள் புதிய உறுப்பினரின் வருகையால் எங்கள் வீடு இன்னும் இனிமையானதாக மாறப்போகிறது! ஆம்! நாங்கள் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறோம். உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும், அன்பும், பிரார்த்தனைகளும் தேவை. அன்புடன் அட்லீ, பிரியா, மீர், பெக்கி, யூகி, சோக்கி, காபி மற்றும் கூபி” என்று பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.