பாஜக தேசிய தலைவராக செயலபட்டு வந்த ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் முன்பே முடிவடைந்து விட்டது. ஆனால் மாநில மற்றும் மக்களவை தேர்தலை முன்னிட்டு அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த நிலையில், பாஜகவின் புதிய தேசிய தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலுக்காக நேற்று நடைபெற்ற வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக செயல்பட்டு வரும் நிதின் நபின் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், போட்டியின்றி தலைவராக நேற்று அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் படி இன்று அவர் டெல்லியில் கட்சி தலைமையகத்தில் பாஜக தேசிய தலைவராக இன்று பொறுப்பேற்று கொண்டார்.
இந்த நிலையில் பாஜகவின் புதிய தேசிய செயளாலராக பதவியேற்றுள்ள நிதின் பிபினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
“பாஜகவின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நிதின் நபின் ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் இந்த முக்கியப் பதவியை எட்டிய இளம் தலைவர் இவரே.
தனது அயராத உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வால், அவர் அமைப்பின் பொறுப்புகளை முழு நேர்மையுடன் நிறைவேற்றி இந்த நிலையை அடைந்துள்ளார்.
அவரது ஆற்றல்மிக்க தலைமைத்துவம், அமைப்புத் திறன் மற்றும் தொண்டர்களுடனான ஆழமான தொடர்பு ஆகியவை கட்சியை மேலும் வலுப்படுத்தும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
அவரது தலைமையில், அனைத்து பாஜக தொண்டர்களும் புதிய உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் தேச சேவை மற்றும் மக்கள் சேவைக்கான தங்கள் உறுதிமொழியை நிறைவேற்றுவதில் எந்தக் குறையும் வைக்க மாட்டார்கள்”
என்று தெரிவித்துள்ளார்.







