பாஜக அழிவு சக்தி என்பதை அதிமுகவும், அதன் தொண்டர்களும் உணர வேண்டும்; தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி

பாஜக அழிவு சக்தி என்பதை அதிமுகவும்,அதன் தொண்டர்களும் உணர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிநாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.…

பாஜக அழிவு சக்தி என்பதை அதிமுகவும்,அதன் தொண்டர்களும் உணர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிநாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை தொடங்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஸ்.அழகிரி பாஜக அழிவு சக்தி என்பதை அதிமுகவும், அதன் தொண்டர்களும் உணர வேண்டும் என்று கூறினார்.

மேலும்,முதல்வர் வேட்பாளரை கூட தேர்வு செய்ய முடியாத நிலையில் அதிகமுக இருப்பதாக சாடிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான 3500 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க விடாமல் முதல்வர் தடையாணை பெற்றிருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். இன்னும்15 நாட்களில் வழக்கு விசாரணையை தொடங்காவிட்டால், காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply