”நல்ல அரசை கொடுப்பதற்கான அதிகாரம் வேண்டும் என்பதே குறிக்கோள்”- கமல்ஹாசன்!

மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணமுடையவர்கள் யார் வேண்டுமானாலும் தங்களுடன் கை கோர்க்கலாம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் . கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன்,…

மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணமுடையவர்கள் யார் வேண்டுமானாலும் தங்களுடன் கை கோர்க்கலாம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் .

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன், அங்குள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘மக்கள் பணியில் அனுபவமுள்ளவர்கள் தங்களுடன் இணைவதாகவும், நல்ல அரசை கொடுப்பதற்கான அதிகாரம் வேண்டும் என்பதே குறிக்கோள் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஊரெல்லாம் தேடி நல்லவர்களை இணைக்க முயற்சி செய்வதாகவும், மக்களுக்கு நல்லது நடக்கும் என்கிற எண்ணத்தோடு தங்களுடன் யார் வேண்டுமானாலும் கை கோர்க்கலாம் என்றும் தெரிவித்தார்.

ரஜினி தெரிவிக்கும் கருத்தில் தான் எதுவும் சொல்ல முடியாது எனவும், அவரிடம் ஆதரவு கேட்கும் போது உங்களுக்கு தெரியாமல் கேட்க மாட்டேன் எனவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply