‘அடுத்த 24 மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு’ – வானிலை ஆய்வு மையம்

Latest Weather Report: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அநேக இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

latest weather report

Latest Weather Report: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அநேக இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழையும் ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

12.01.2020: தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply