துபாயில் கோலாகலமாக நடந்த தமிழ் பயிற்சி பள்ளிக்கூடத்தின் 5வது ஆண்டு விழா..!

துபாயில் செயல்பட்டு வரும் அன்னை தமிழ் அறிவோம் பள்ளிக் கூடத்தின் ஐந்தாம் ஆண்டு விழா அஜ்மானில் நடைபெற்றது. துபாயை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம்  ‘அன்னை மொழி அறிவோம், “ எனும் நிறுவனமாகும்.…

துபாயில் செயல்பட்டு வரும் அன்னை தமிழ் அறிவோம் பள்ளிக் கூடத்தின் ஐந்தாம் ஆண்டு விழா அஜ்மானில் நடைபெற்றது.

துபாயை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம்  ‘அன்னை மொழி அறிவோம், “ எனும் நிறுவனமாகும். இதன் நிறுவனராக கங்காதரன் மற்றும் தலைவராக அனுராதா கங்காதரன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மூலம் இலவச தமிழ் பயிற்சி பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது.

தமிழ் மார்ட், அமீரகம் மற்றும் லிட்டில் ஸ்ப்ரவுட்ஸ் நர்சரி இணைந்து நடத்தும் அன்னை மொழி அறிவோம் இலவச தமிழ் பயிற்சி பள்ளியின் ஐந்தாம் ஆண்டு விழா அஜ்மானில் உள்ள ஹாபிடட் ஸ்கூல் வளாகத்தில் இனிதே நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குநர் இரா.கோ.யோகேந்திரன் மற்றும் எம்.டி.எஸ். மேலாண்மை நிறுவனத்தின் நிறுவனர் கல்லிடைக்குறிச்சி சேர்ந்த முனைவர் ஆ.முகமது முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும்  கவுரவ விருந்தினர்களாக எழுத்தாளர் நஸீமா ரஸாக் மற்றும் தொழிலதிபர் இஷாக் அலி ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழாவில்  இலவச தமிழ் பயிற்சி பள்ளிக்கூடத்தின் நிறுவனர் அனுராதா கங்காதரன் வரவேற்று பேசினார். மேடையில்  மாணவர்களுக்கு நடத்தப்பட்ட  திறனாய்வு போட்டிகளுக்கான
பரிசுகள் வழங்கப்பட்டது.

தமிழ் பயிற்சி பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள்  வரவேற்பு நடனம், வில்லுப்பாட்டு, பறை இசை, ஒயிலாட்டம், சுதந்திர போராட்ட பாடல்கள், நீதிக்கதைகள், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் போன்ற தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.
மேலும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட இந்திய தலைவர்கள் போன்று மாறுவேடமணிந்து மாணவர்கள் மேடையில் தோன்றியது  பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

‘அன்னை மொழி அறிவோம் ‘  பள்ளிக்கூடத் தில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றிய 2 பேருக்கு பஞ்சமி விருது வழங்கப்பட்டது. மேலும் 13 பேருக்கு தன்னார்வலர் விருதுகள் வழங்கப்பட்டது. அதேபோல் எம்.டி.எஸ். நிகழ்ச்சிமேலாண்மை நிறுவனம் சார்பிலும் 14 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.