தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: மீண்டும் வென்ற தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட தேனாண்டாள் முரளி 150 வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் தலைவரானார். நூற்றாண்டு சிறப்பு கொண்ட தமிழ் சினிமாவில் பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில்…

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட தேனாண்டாள் முரளி 150 வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் தலைவரானார்.

நூற்றாண்டு சிறப்பு கொண்ட தமிழ் சினிமாவில் பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமான சங்கம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இதன் தலைவராக தேனாண்டாள் முரளி இருந்தார். இந்த சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் நேற்று (ஏப்ரல் 30) காலை 9 மணிக்கு துவங்கி நடைபெற்றது. சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேர்தலில் ஏராளமானோர் வாக்களித்தனர்.

Tamil Film Producers Association election has started – results will be announced tomorrow

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு தயாரிப்பாளர் நலம் காக்கும் அணி சார்பில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியும், தயாரிப்பாளர் உரிமை காக்கும் அணி சார்பில் மன்னனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் போட்டியிட்ட தேனாண்டாள் முரளி 150 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தலைவர் பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

பின்னர், சென்னை அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

வாக்களித்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைகளுக்கு மானியங்கள் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி . சிறு படங்கள் வெளியீடு, சிறு படங்களுக்கான இன்சூரன்ஸ் மற்றும் 2006ல் திரைப்பட தொழிலாளர்களுக்கு கருணாநிதி வழங்கிய பத்தரை ஏக்கர் நிலத்தில் வீடு கட்டும் பணி ஆகியவை விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.