முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தீர்மானம் – மே தின கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றம்!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மே தினத்தை முன்னிட்டு
ஏகனாபுரம் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு ஒரு மனதாக 6-வது முறை தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார் பாக்கம், அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம்,சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4791 ஏக்கர் பரப்பளவில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து
ஏகனாபுரம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், மேலேறி, உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த
மக்கள் ஒரு விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட
போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குடியிருப்புகளையும் வாழ்வாதாரங்களையும் இழக்கும் கிராம மக்கள் கிராம சபை
கூட்டங்களில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்களை
நிறைவேற்றி வருகின்றனர். புதிய விமான நிலையம் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 279 நாளாக ஏகனபுரத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தின கிராம சபை கூட்டத்திலும்
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி கிராம சபை, நவம்பர் மாதம் 2ம் தேதி உள்ளாட்சி
தினத்தை முன்னிட்டும், ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டும், மார்ச் மாதம் 22 ம் தேதி உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டும் நடந்த கிராமசபை கூட்டத்திலும் விளைநிலங்களையும் குடியிருப்புகளையும் இழக்கும் கிராமமான ஏகனாபுரம் கிராம மக்கள் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5-முறை தீர்மானங்களை நிறைவேற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் மே தினத்தை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு
உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய மாநில அரசுகள் திட்டத்தை கைவிட வேண்டும், என கோரிக்கை விடுத்து கிராமசபை கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானத்தை 6-வது முறையாக நிறைவேற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

மே தினத்தை தினத்தை கொண்டாடும் இந்நாளில் ஏரிகள் குளங்கள் உள்ளிட்ட
நீர்நிலைகள் அதிகம் உள்ள பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்தையும்
விவசாய தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது என தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் மறறும் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி 12 மணி
நேரம் வேலை மசோதா திரும்ப பெற்றதை தொடர்ந்து 279வது நாளாக போராட்டம் நடத்தி
வரும் இந்த திட்டத்தை ஏன் ஆதரிக்கிறது உடனடியாக இந்த திட்டத்தை கைவிட்டு
விவசாய நிலங்களையும் விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள்
கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வட போச்சே! – கோயில் உண்டியலை திருட முயன்ற கொள்ளையனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

G SaravanaKumar

சர்வதேச விமான சேவைக்கான தடை ஜன.31 வரை நீட்டிப்பு

EZHILARASAN D

காவல் நிலைய பொறுப்பாளர் நாற்காலியில் அமர்ந்து மது அருந்திய நபர்; அதிர்ச்சியூட்டும் புகைப்படம்!

Web Editor