ஜூன் 23-ஆம் தேதி கூடும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்…!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி டெல்லியில் கூடுகிறது.

காவிரி நீரை சுமூகமாக பகிர்ந்துகொள்வதற்காக கடந்த 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஆணையம் அவ்வப்போது கூடி காவிரி நீர் பகிர்வு மற்றும் காவிரி விவகாரம் குறித்து விவாதிக்கும். அதன்படி இந்த ஆணையம் இதுவரை 51 முறை கூடியுள்ளது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் டெல்லியில் ஜூன் 23-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று கர்நாடகா அரசு முயன்ரு வருகிறது. இதற்கு தமிழ் நாடு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தினார். இதற்க்கு தமிழ் நாட்டை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மேகதாதுவில் அணைக் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கர்நாடக முதலமைச்சர் மேகதாது அணைக்கட்ட அனுமதி கேட்டுள்ள நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.