நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு முடிந்த நிலையில் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கிடையே பிப்ரவரி 1-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
30 நாட்கள் இடைவேளைக்கு பிறகு ஐந்து மாநில தேர்தல் நடந்து முடிந்த இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடுகிறது.
இன்று தொடங்கி, வரும் ஏப்ரல் 8-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. மேலும் இந்த இரண்டாவது அமர்வில், மாநிலங்களவைக்கு 19 மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா பரவல் காரணமாக முதல் கட்ட கூட்டத் தொடரில், காலையில் மாநிலங்களவையும், மாலையில் மக்களவையும் செயல்பட்டன. தற்போது, கொரோனா குறைந்துள்ளதால், இரு சபைகளும் வழக்கம் போல் தொடங்குகின்றன.








