காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தொடருவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தோல்வி தொடர்பாக விவாதிக்க, காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, முகுல்வாஸ்னிக், குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ப.சிதம்பரம் உள்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
அண்மைச் செய்தி: தமிழர்கள் எங்கு இருந்தாலும் அவர்களை காப்பாற்றும் இயக்கம்தான் திமுக: முதலமைச்சர்
5 மாநில சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதோடு, கட்சித் தலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், சோனியா காந்தியே, கட்சியின் தலைவராக தொடருவார் என கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார். இதேபோல், சோனியா காந்தியின் தலைமை மீது, கட்சி நம்பிக்கை வைத்துள்ளதாக மற்றொரு மூத்த தலைவர் மல்லிகார்ஜூ கார்கேவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








