திருத்துறைப்பூண்டியில் 17வது தேசிய நெல் திருவிழா தொடங்கியது !

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தனியார் திருமண அரங்கில், ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சார்பில், 17வது தேசிய நெல் திருவிழா  நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தனியார் திருமண அரங்கில்…

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தனியார் திருமண அரங்கில்,
ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சார்பில்,
17வது தேசிய நெல் திருவிழா  நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தனியார் திருமண அரங்கில் ‘ஆதிரங்கம்
நெல் ஜெயராமன்’ பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சார்பில், 17வது தேசிய நெல்
திருவிழா நடைபெற்றது. இதில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள, 174 பாரம்பரிய
நெல் ரகங்கள் கண்காட்சிக்குவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட
மாட்டு வண்டியில், நெல் மூட்டை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

இயற்கை முறையில் உள்ள காய்கறி விதைகள் கண்காட்சி, வேளாண் நவீன
இயந்திரங்கள் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில்
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் திருத்துறைப்பூண்டி
சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த திருவிழாவில், காலை உணவாக கேழ்வரகு கூழ் மற்றும் மாப்பிள்ளை சம்பா
கஞ்சி வழங்கப்பட்டது. மேலும் மதிய உணவு கருப்பு கவுனியில் செய்யப்பட்ட
சர்க்கரை பொங்கல், கிச்சிலி சம்பா அரிசியில் செய்யப்பட்ட சாம்பார் சாதம்,
மாப்பிள்ளை சம்பா அரிசியில் செய்த தயிர்சாதம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்ற அனைத்து
விவசாயிகளுக்கும், தலா 2 கிலோ பாரம்பரிய நெல் இலவசமாக வழங்கப்பட்டது.
விழாவில் கருத்தரங்கம், நெல் கண்காட்சி, உணவு திருவிழா மற்றும் கலை
நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தொடர்ந்து இயற்கை நெல் செய்து வரும்
உழவர்களுக்கு, இயற்கை தர சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.