கேரளாவில் 8 வயது சிறுவனை துரத்திய தெருநாய் – சினிமா பாணியில் காப்பாற்றிய நபரின் வீடியோ வைரல்

கேரளாவில் 8 வயது சிறுவனை தெருநாய் துரத்தியது.  அப்போது அலறி அடித்து ஓடிய சிறுவனை ஒரு நபர் மயிரிழையில் காப்பாற்றினார்.  அக்காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம், மலப்புறம் அருகே திருரங்காடி…

கேரளாவில் 8 வயது சிறுவனை தெருநாய் துரத்தியது.  அப்போது அலறி அடித்து ஓடிய சிறுவனை ஒரு நபர் மயிரிழையில் காப்பாற்றினார்.  அக்காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம், மலப்புறம் அருகே திருரங்காடி பகுதியை சேர்ந்த சிறுவன் முகமதுரசுல் (8).  இவன் அப்பகுதியில் உள்ள முஸ்லீம் பாட சாலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று அந்த சிறுவனை துரத்தியது.

நாய் துரத்தியதை கண்ட சிறுவன் பதற்றத்தில் கத்தி கூச்சலிட்டு தன்னால் முடிந்தவற்றை செய்தான். நாயும் சிறுவனை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. சிறுவன் பயத்தில் அலறி அடித்து ஓடி, அருகில் இருந்த வீட்டின் அருகே கூச்சல் போட்டான்.

நாயின் சத்தமும் சிறுவனின் சத்தமும்  கேட்டு அவ்வீட்டு உரிமையாளர் மற்றத்து முல்ல கோயா திடீரென ஓடி வந்து நாயை துரத்தி மயிரிழையில் சிறுவனை காப்பாற்றினார்.  இச்சம்பவத்தின் சிசிடிவி  காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.