#Madurai தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி! இன்று முதல் வரும் 16ம் தேதி வரை நடைபெறும்!

மதுரையில் புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கி செப்.16ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் என ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். மதுரையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக ப.பா.சி. ஒருங்கிணைப்பில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா சிறப்பாக…

The 11-day Book Fair in Madurai will begin today

மதுரையில் புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கி செப்.16ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் என ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.

மதுரையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக ப.பா.சி. ஒருங்கிணைப்பில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான புத்தக திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் வருகின்ற 06.09.2024 முதல் 16.09.2024 வரையில் நடைபெறவுள்ளது.புத்தகத் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்குகள், குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள் : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு | ”90 சதவீத விசாரணை நிறைவு; ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை!” – சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்

தினந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் ”சிந்தனை அரங்கம்” நிகழ்ச்சி நடைபெற உள்ளன. புத்தகத்திருவிழா தினந்தோறும் மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை நடைபெறும் என அறிவித்துள்ளனர். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தலைப்புகளில் பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.