மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் தவெக தலைவர் விஜய்!

ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நிவாரணப் பொருட்களை வழங்கினார். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி கரையைக் கடந்தது. இந்த…

Thaweka leader Vijay provided relief materials to people affected by rain and floods!

ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி கரையைக் கடந்தது. இந்த புயலால் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகின.

குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.2000 கோடி நிவாரணம் வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக தலைவர் விஜய் நிவாரண உதவி வழங்கியுள்ளார். பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களை வரவழைத்து நிவாரண உதவிகளை வழங்கியிருக்கிறார். 250க்கும் மேற்பட்டோரை பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்த தவெக தலைவர் விஜய், அவர்களிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு, அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.