1 மணி நேரத்தில் இத்தனை கப் “டீ”யா? கின்னஸ் சாதனை படைத்த பெண்

தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த இங்கார் என்பவர் ஒரு மணி நேரத்தில் 249 கப் தேநீர் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வுப்பர்தாலின் இங்கார் வாலண்டின் என்பவர் ஒரு மணி நேரத்தில் அதிக கப்…

தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த இங்கார் என்பவர் ஒரு மணி நேரத்தில் 249 கப் தேநீர் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வுப்பர்தாலின் இங்கார் வாலண்டின் என்பவர் ஒரு மணி நேரத்தில் அதிக கப் தேநீர் தயாரித்து கின்னஸ் சாதனை படைக்க நினைத்தார். இதையடுத்து அவர் தனது உலக சாதனை முயற்சிக்காக தென்ஆப்பிரிக்காவின் பிரபலமான ரூயிபோஸ் தேநீர் தயாரிக்கத் முடிவெடுத்தார். இது தென்னாப்பிரிக்காவின் ஸ்பாலதஸ் லீனரிஸ் புதரின் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சிவப்பு மூலிகை தேநீர். இந்த தேநீரின் அசல் சுவை, வெண்ணிலா மற்றும் ஸ்ட்ராபெரி ஆகிய மூன்று வகைகளயும் அவர் பயன்படுத்தினார்.

இங்கார் ஏற்கனவே உள்ள கின்னஸ் சாதனையை முறியடிக்க ஒரு மணி நேரத்தில் குறைந்தபட்சம் 150 கப் தேநீர் தயாரிக்க வேண்டும். ரூபோயிஸ் சுவையில் ஒரு கப் தேநீர் தயாரிக்க டீபேக் குறைந்தது 2 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். இங்கார் ஒரு கப்பில் 4 டீபேக்குகளை ஊறவைத்து 4 கப் தேநீரை தயாரித்தார்.

இங்கார் ஒரு மணி நேரத்தில் 250 கப் தேநீர் தயாரித்தார். இருப்பினும், ஒரு கப் தேநீர் அளவு குறைவாக இருந்த காரணத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டது. எனவே, அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 249 ஆக இருந்தது. அவர் ஒரு நிமிடத்தில் 4 கப் தேநீருக்கும் மேல் தயாரித்துள்ளார்.

இதுகுறித்து கின்னஸ் சாதனை படைத்த இங்கார் கூறுகையில், கடந்த 2018ம் ஆண்டு காட்டுத்தீயினால் எங்கள் சமூகம் மிகவும் பாதிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட அழிவினால் 200க்கும் மேற்பட்டோர் தங்களின் வீடுகளை இழந்தனர். இந்த சாதனை எங்கள் சமூகத்திற்காக நான் அர்ப்பணிக்கிறேன் என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.