முக்கியச் செய்திகள் தமிழகம்

தீபாவளி சிறப்பு பேருந்துகள்: எந்த நிறுத்தத்தில், எந்த ஊர் பேருந்து?

தீபாவளி சிறப்பு பேருந்துகள் எந்தெந்த நிறுத்தத்தில் எந்த ஊர் பேருந்துகள் நிற்கும் என்பதற்கான அறிவிப்பை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் மொத்தம் 5 இடங்களிலிருந்து வெளியூர் செல்லும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகளும், கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து இசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகளும், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்திலிருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், சேத்பட்டு, வந்தவாசி செஞ்சி மார்க்கம் செல்லும் பேருந்துகள்.

திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடிலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தத்திலிருந்து, வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி செல்லும் பேருந்துகளும், கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் போன்ற இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

செஸ் விளையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

G SaravanaKumar

அமெரிக்காவில் துவக்கப்பள்ளியில் துப்பாக்கிச்சூடு – 18 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி

Mohan Dass

கொரோனோ தடுப்பூசி போடும் பணிகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர்!

Niruban Chakkaaravarthi