தமிழ்நாடு பட்ஜெட் 2024- 25 : துறைவாரியாக நிதி ஒதுக்கீடு எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்.…

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வருகை தந்தார்.  அவரை சந்தித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து பெற்றார்.  அதன்பின்,  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் காட்சிக்கு எளிமையும்,  கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கினார்.

இதையடுத்து, தமிழ்நாடு பட்ஜெட் தாக்கலில் துறைவாரியாக நிதி ஒதுக்கீடு ;

  • பள்ளிக்கல்வித்துறை – ரூ.44,042 கோடி
  • உயர்கல்வித்துறை – ரூ.8,212 கோடி
  • நீர்வளத்துறை – ரூ.8,398 கோடி
  • சிறுபான்மையினர் நலத்துறை – ரூ.1,429 கோடி
  • நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை – ரூ.20,043 கோடி
  • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை – ரூ.20,198 கோடி
  • ஆதிதிராவிடர் நலத்துறை – ரூ.3,706 கோடி
  • ஜவுளி மேம்பாட்டுத் துறை – ரூ.500 கோடி
  • இளைஞர் நலன்,  விளையாட்டு மேம்பாட்டு துறை – ரூ.440 கோடி
  • மக்கள் நல்வாழ்வுத் துறை – ரூ.20,198 கோடி
  • மகளிர் உரிமைத் தொகை – ரூ.13,720 கோடி
  • ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை  – ரூ.27,922 கோடி
  • நீர்வளத்துறை – ரூ. 8,398 கோடி
  • தொழில மற்றும் சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் துறை – ரூ. 4,481 கோடி
  • சமூக நலத்துறை – ரூ.7,830 கோடி
  • மதுரை(6.4 லட்சம் சதுர அடி ) – ரூ.345 கோடி
  • திருச்சி(6.3லட்சம் சதுர அடி ) – ரூ.350 கோடி
  • விடியல் பயணம் – மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்திற்கு  ரூ.3,050 கோடி
  • காவல்துறை – ரூ. 12,543 கோடி
  • எரிசக்தித்துறை – ரூ.22,310 கோடி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.