முக்கியச் செய்திகள் தமிழகம்

நெல்லையில் ரூ.15 கோடியில் ’பொருநை அருங்காட்சியகம்’: முதலமைச்சர்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அகழாய்வுப் பணிகள் தொடர்பாக 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.

இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, ‘கீழடி அகழாய்வை
உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. அந்த அகழாய்வை மத்திய அரசு பாதியில்
கைவிட்டது. ஆனால் தற்போது கீழடி மூலம் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை
உலகமே அறிந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு கீழடிக்கு நான் நேரில் சென்று பார்வையிட்ட போது, நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளிக்காசு கண்டறியப்பட்டது. தமிழ் சமூகம் கிமு ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற, சங்க இலக்கிய சமூகம் என்று தெரிவித்தது கீழடி தொல்லியல் ஆய்வு என்றார்.

அவர் மேலும் கூறும்போது, பண்டைய நாகரிகம் கொண்ட மண் தமிழ்நாடு என்பதற்கு தொல்லியல் சான்றுகள் உள்ளன; 1990ல் கடல்சார் ஆய்வுக்கு பெரும் திட்டம் தீட்டியதும், பூம்புகாரில் கடலுக்கு அடியில் சில கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டதும் கலைஞரால்தான்.
கொற்கை, சிவகளை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்த,
நெல்லையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என்று அமெரிக்காவின்
பீட்டா அனலிட்டிக்கல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது. தமிழ் நிலப்பரப்பில் இருந்து வர லாற்றை எழுத வேண்டும் என்பதை அறிவியல் வழி நின்று நிறுவுவதே திமுக அரசின் லட்சி யம் என்றார்.

‘தமிழர் பண்பாட்டின் வேர்களை தேடி இந்திய நாடெங்கும் ஆய்வுப் பணிகள் மேற்கொள் ளப்படும். கேரள மாநிலம் பட்டணம், ஆந்திராவின் வேங்கி, கர்நாடகாவின் தலைக் காடு, ஒடிசாவின் பாலூர் ஆகிய வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும்’ என்று அவர் கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்தாரா? நடிகர் சோனு சூட் விளக்கம்

Ezhilarasan

ஆப்கானிஸ்தானில் இருந்து 24 மணி நேரத்தில் 12,500 பேர் மீட்பு: அமெரிக்கா

Gayathri Venkatesan

கோவாக்சினை அவசரகால பயன்பாட்டிற்காக சேர்க்க கோரிய விண்ணப்பம் பரிசீலனைக்கு ஏற்பு!

Gayathri Venkatesan