தளபதி பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பிக்கலாங்களா?

நடிகர் விஜயின் பிறந்தநாளுக்கு இன்னும் ஒரே நாள் இருக்கும் நிலையில் தளபதி 65 படக்குழுவினர் படத்தின் அசத்தல் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு, வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் “மாஸ்டர்”. இந்த படத்தை அடுத்து நடிகர்…

நடிகர் விஜயின் பிறந்தநாளுக்கு இன்னும் ஒரே நாள் இருக்கும் நிலையில் தளபதி 65 படக்குழுவினர் படத்தின் அசத்தல் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு, வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் “மாஸ்டர்”. இந்த படத்தை அடுத்து நடிகர் விஜய் மற்றும் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு “தளபதி 65” என்று பெயரிடப்பட்டுள்ளது.
விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் தளபதி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அசத்தல் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

‘தளபதி 65’ ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 21 அன்று (நாளை) மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நாளை மறுநாள் ஜூன் 22 அன்று விஜய் தனது 47 வது பிறந்த நாளை  கொண்டாடுவதால் ரசிகர்களுக்கு இந்த அப்டேட் சிறப்பான கொண்டாட்டத்திற்கான செய்தியாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தெலுங்கு பட நாயகி பூஜா ஹெக்டே நடிகர் விஜயுடன் இந்த படத்தில் ஜோடியாக நடிக்கிறார். அனிருத்தின் துள்ளல் இசையில் உருவாகிறது “தளபதி 65”.

படத்தின் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் விஜய் ரசிகர்களின் மனதைக் கவரும் வகையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்-கை  வெளியிடுவார் என்றும்,  அனைத்து விஜய் ரசிகர்களுக்கு ஆன்லைன் விருந்தாக இந்த ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அமையும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.