தடுப்பூசி போட்டவர்களுக்கு சலூன் கடையில் 50% கட்டணம் தள்ளுபடி!

மதுரையில் சலூன் கடை ஒன்றில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான…

மதுரையில் சலூன் கடை ஒன்றில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

கொரோனா பரவலை தடுப்பதற்காக, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து அரசும் தன்னார்வலர்களும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே, மதுரையில் உள்ள சலூன் கடை ஒன்றில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு முடி திருத்தம் பேஷியல் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும், என அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்கப்படுத்தவும் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இவ்வாறு சலுகையை அறிவித்துள்ளதாக சலூன் கடை உரிமையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் கொரோனா பரவலின் 3 ஆம் அலையை தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.