தோனி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் எல்ஜிஎம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது.
தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் திரைப்படம் ‘எல்.ஜி.எம்’(லெட்ஸ் கெட் மேரீட்). அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ திரைப்படத்தில் நடிகை நதியா, நட்சத்திர நடிகர் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகும் இந்த திரைப்படத்தை தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 28 ஆம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
இதையும் படியுங்கள் : ’அதிமுக மாநாட்டில் சசிகலா கலந்துகொள்வது குறித்த அறிவிப்பு வரும்’ – ஓபிஎஸ்
இந்நிலையில் எல்.ஜி.எம் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை இரவு 7 மணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடுகிறார்.








