இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் தோனி நடிகர் விஜய்யின் படத்தைத் தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் குறித்த செய்திகளும், அவரது படம் தொடர்பான சிறு செய்திகளும் பெரிய அளவில் பேசுபொருளாகி வருகிறது.
அப்படி இருக்க விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி செண்டிமெண்ட் படமாக உருவாகி வருகிறது. 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியாக உள்ளது.
வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜயின் 67-வது படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தால் உருவாக உள்ளது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான “மாஸ்டர்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்குப் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைய உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் தோனி நடிகர் விஜய்யின் படத்தைத் தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் தோனி, தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ‘தோனி எண்டர்டெயின்மென்ட்’ சார்பாக ரோர் ஆஃ தி லயன், ப்ளேஸ் டு குளோரி மற்றும் தி ஹிடன் ஹிந்து ஆகிய மூன்று படங்களைத் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ள தோனி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டாப் நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யை வைத்து தோனி பெரிய பட்ஜெட் படம் ஒன்றைத் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் விஜயின் 70வது திரைப்படத்தை தோனி தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தோனிக்கு பிடித்த எண் 7 என்பதால் விஜய் நடிக்கவுள்ள 70-வது படத்தைத் தான் தோனி தயாரிக்க உள்ளதாக கிசு கிசுக்கப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.







