தைப்பூசம் – தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

தைப்பூசத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். தைப்பூசத்தையொட்டி, சேலம் மாவட்டம், புத்தரகவுண்டன் பாளையத்தில் 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன.…

தைப்பூசத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தைப்பூசத்தையொட்டி, சேலம் மாவட்டம், புத்தரகவுண்டன் பாளையத்தில் 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள தந்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, யாக சாலை பூஜைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

தைப்பூசத்தையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.