தைப்பூசத் திருநாள் – பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து…….!

இந்திய பிரதமர் மோடி தைப்பூச திருநாளையொட்டி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் பரவலாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று தைப்பூசம். அதன் படி இன்று தைப்பூச திருநாளையொட்டி முருகப் பெருமானின் கோயிகளில் திரளான் பக்தரக்ள் குவிந்து வருகின்றனர்.

அதே போல் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, திருத்தணி, சுவாமி மலை, திருச்செந்தூர், பழமுதிர்சோலை உள்ளிட்ட கோயில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தைப்பூச திருநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி தைப்பூச திருநாளையொட்டி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்தில், “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! புனிதமான தைப்பூசத் திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்குக் கிடைக்கட்டும். நல்ல ஆரோக்கியம், வெற்றி மற்றும் வளத்துடன் அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.