முக்கியச் செய்திகள் விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மின்டன்; அரையிறுதியில் பி.வி. சிந்து

தாய்லாந்தில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி வி சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

தாய்லாந்தில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, தென்கொரியாவின் யு ஜின் சிம்முடன் மோதி காலிறுதிக்குள் நுழைந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

காலிறுதிப் போட்டியில் முதல் செட்டில், உலகின் முதல் நிலை ஜப்பான் வீராங்கனையான யாமகுச்சியை எதிர்கொண்ட சிந்து, முதல் செட்டை 21-15 என கைப்பற்றினார். 2வது செட்டில் ஆதிக்கம் காட்டிய ஜப்பான் வீராங்கனை சிந்துவுக்கு ஈடு கொடுத்து, இரண்டாவது செட்டை 22-20 என கைப்பற்றினார்.

மூன்றாவது செட்டில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வகையில் விளையாடிய சிந்து, பெரும் ஆளுமையுடன் 21-13 என கைப்பற்றி அரையிறுதிப் போட்டிக்கு பி.வி.சிந்து முன்னேறினார்.

இந்நிலையில் நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி வி சிந்து உலகின் நான்காம் நிலை வீராங்கனையான சீனாவை சேர்ந்த யூ பை சென் ஐ எதிர்கொள்ள உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கவுண்டவுன் தொடங்கியது; காலை 9.18 மணிக்கு விண்ணில் பாய்கிறது SSLV – D1 ராக்கெட்!

Arivazhagan Chinnasamy

நெருப்புக்கு இறையான குடும்பம்; 2வது நாளாக சோதனை

G SaravanaKumar

நான் சர்வாதிகாரியாக மாறுவேன்- முதலமைச்சர் எச்சரிக்கை

G SaravanaKumar