முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு தமிழகம் செய்திகள்

TET தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு – அக்.14-ல் நடைபெறும் என அறிவிப்பு

2022-ம் ஆண்டுக்கான TET தேர்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 14-ம் தேதி தொடங்குவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

 

ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை உள்ள தேதிகளில் தாள்- 1 ற்கு மட்டும் முதற்கட்டமாக கணினி வழியில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இதற்கிடையே, நிர்வாக காரணங்களினால், தாள் 1-ற்கான தேர்வு செப்டம்பர் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்தப்பட இருப்பதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், மீண்டும் TET தேர்வுக்கான புதிய தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை TET எனப்படும் ஆசிரியர் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வுக்கு 7 நாட்களுக்கு முன்பாக எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரமும், 3 நாட்களுக்கு முன்பாக தேர்வு மையத்தின் விவரமும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி

Halley Karthik

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்

Halley Karthik

சசிகலா, அ.தி.மு.க கொடியேற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது: ஜெயக்குமார்

Halley Karthik