திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள நகராட்சி பெண்ட்லண்ட் மாதிரி
தொடக்க பள்ளி உணவு வழங்கும் பொறுப்பாளர் மணிமேகலையிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் காலை உணவு குறித்து கேட்டறிந்தார்.
காலை உணவு திட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, துறைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நிதித் துறைச் செயலாளர் முருகானந்தம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் விவரங்கள் குறித்து திருவாரூர்
மாவட்டம், மன்னார்குடியில் உள்ள நகராட்சி பெண்ட்லண்ட் மாடல் தொடக்கப்பள்ளி
பள்ளியின் காலை உணவு வழங்கும் பொறுப்பாளர் மணிமேகலையிடம் தமிழக முதல்வர்
முக.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். இதுகுறித்து மணிமேகலை அளித்த பேட்டியில் கூறியதாவது:

காலை உணவு மாணவர்களுக்கு சரியான நேரத்தில் வந்து சேர்கிறதா ? என
முதல்வர் என்னிடம் கேட்டார். சரியான நேரத்திற்கு உணவு வந்து விடுகிறது. உணவு
சுவையாக இருப்பதால் காலை உணவை மாணவர்கள் விரும்பி சாப்பிடுவதாக தெரிவித்தேன். 
வேறு ஏதேனும் கோரிக்கைகள் இருக்கிறதா? குறைகள் இருந்தால் சொல்லுங்கள் சரி
செய்கிறேன் என முதல்வர் மணிமேகலையின் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த மணிமேகலை காலை உணவில் எந்த குறையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
பின்னர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை சுமதியிடம் பேசிய முதல்வர் காலை உணவு
போதிய அளவு மாணவர்களுக்கு கிடைக்கிறதா மாணவர்கள் உணவை விரும்பி
சாப்பிடுகிறீர்களா என கேட்டுள்ளார்? இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள்
அனைவருக்கும் காலை உணவு சரியான நேரத்தில் எந்த தடையும் இன்றி கிடைப்பதாக
முதல்வரிடம் தலைமை ஆசிரியை சுமதி தெரிவித்தார்.
மன்னார்குடி ருக்மணிபாளையம் பகுதியில் உள்ள நகராட்சி பேண்ட்லண்ட் மாதிரி
தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 40 மாணவர்கள் படித்து
வருகின்றனர்.







