ஐபிஎல் 2026 தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது.
டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 6-ந் தேதி தொடங்குகிறது. அதே போல ஒரு நாள் போட்டிகள் தர்மசாலாவில் ஜூன் 14-ந் தேதியும், லக்னோவில் 17-ந் தேதியும், சென்னையில் 20-ந் தேதியும் நடக்கிறது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான வலைப்பயிற்சியை இந்திய அணி தொடங்கியுள்ளது. இது தொடர்பான காணொலிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.




