கர்நாடக மாநில முதலமைச்சராக டி.கே. சிவகுமார் இன்று பதவியேற்றார். பெங்களூருவில் உள்ள லோக் பவனின் கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் டி.கே. சிவகுமாருக்கு தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு.டி.கே. சிவகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.







