டெஸ்லா உயர் பதவியில் இந்தியர்! தலைமை நிதி அலுவலராக வைபவ் தனேஜா நியமனம்!

எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான எலான் மஸ்க்கின் டெஸ்லா, இந்தியரான வைபவ் தனேஜாவை புதிய நிதி அதிகாரியாக (CFO) நியமித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தில் சுமார் 13…

எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான எலான் மஸ்க்கின் டெஸ்லா, இந்தியரான வைபவ் தனேஜாவை புதிய நிதி அதிகாரியாக (CFO) நியமித்துள்ளது.

எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தில் சுமார் 13 ஆண்டுகள் தலைமை நிதி அதிகாரியாக (CFO) பணியாற்றியவர் Zachary Kirkhorn. இவர் மார்ச் 2019 இல் CFO ஆக பணியமர்த்தப்பட்டார். கிர்கோர்ன் மார்ச் 2017 முதல் மார்ச் 2019 வரை டெஸ்லாவின் சிஎஃப்ஓவின் தலைமைப் பொறுப்பை வகித்த தீபக் அஹுஜாவுக்குப் பின் அவர் பதவியேற்றார். கிர்கோர்னின் பதவிக்காலத்தில், டெஸ்லா தனது முதல் காலாண்டு லாபத்தை வெகுஜன சந்தையான மாடல் 3 காம்பாக்ட் செடானை அறிமுகப்படுத்தியது மட்டுமின்றி $1 டிரில்லியனுக்கும் அதிகமான சந்தை மதிப்பை அடைந்தது.

அப்படிப்பட்ட திறமைசாலியான இவர் தற்போது தனது ராஜினாமா முடிவை அறிவித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக தலைமை நிதி அதிகாரி பொறுப்பை வகித்து வந்த கிர்கோர்ன் இந்த ஆண்டு இறுதி வரை நிறுவனத்தில் பணியில் இருப்பார். CFO மாற்றத்திற்கான காரணத்தை டெஸ்லா இன்னும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில்,  Zachary Kirkhorn-னின் ராஜிநாமாவை அடுத்து டெஸ்லாவின் புதிய CFO அதாவது புதிய தலைமை நிதி அதிகாரியாக இந்தியரான வைபவ் தனேஜா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கணக்கியல் துறையில் கிட்டத்தட்ட 20 வருட அனுபவம் கொண்டவர். மேலும் அவர் தொழில்நுட்பம், நிதி, சில்லறை வணிகம் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் பல பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.

45 வயதான வைபவ் தனேஜா தற்போது டெஸ்லாவில் தலைமை கணக்கு அதிகாரியாக (CAO) பணியாற்றி வருகிறார். முன்னதாக, அவர் மே 2018 இல் கார்ப்பரேட் கன்ட்ரோலர் பதவியில் பணிபுரிந்தார். பிப்ரவரி 2017 மற்றும் மே 2018 க்கு இடையில், அவர் உதவி நிறுவனக் கட்டுப்பாட்டாளர் பதவியிலும் பணியாற்றியுள்ளார்.

வைபவ் தனேஜா டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் பட்டம் பெற்றவர். ஆரம்பத்தில், அவர் ஜூலை 1999 முதல் மார்ச் 2016 வரை இந்தியாவிலும், அமெரிக்காவிலும் உள்ள பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். 2016 இல், அவர் சோலார் எனர்ஜி நிறுவனமான சோலார் சிட்டிக்கு மாறினார். பின்னர் 2017 ஆம் ஆண்டில், சோலார் சிட்டி டெஸ்லாவால் வாங்கப்பட்ட பிறகு வைபவ் தனேஜா டெஸ்லாவில் சேர்ந்தார்.

2021 ஆம் ஆண்டில், டெஸ்லாவின் இந்தியப் பிரிவான டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் அண்ட் எனர்ஜி பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநராக தனேஜா நியமிக்கப்பட்டார். தனேஜாவுக்கு கணக்கியல் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது.

தனது ராஜிநாமா குறித்தது கிர்கோர்ன் ஒரு லிங்க்ட்இன் பதிவில் கூறுகையில், ‘டெஸ்லாவுடன் பணிபுரிவது வாழ்க்கையின் ஒரு சிறப்பு அனுபவம். 13 ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக இணைந்து செய்த பணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என தெரிவித்துள்ள அவர், டெஸ்லாவை விட்டு விலகுவதற்கான காரணத்தை மட்டும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.