திருக்கோவிலூர் அருகே , பழைய பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கும்
குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அனைத்தும் எரிந்து சாம்பலாயின.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள வடக்கநெமிலி பகுதியில் ,
ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பழைய பொருள் வைக்கும் பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ விபத்து. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு. இதன் காரணமாக,
திருக்கோவிலூர்- திருவெண்ணைநல்லூர் சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக
போக்குவரத்து பாதிக்கபட்டது.
மேலும், திருவெண்ணெய் நல்லூர் மற்றும் திருக்கோவிலூர் தீயணைப்பு மீட்பு
குழுவினர், தீயை கட்டுக்குள் கொண்டு வர இரண்டு மணி நேரமாக முயற்சி செய்து
வருகின்றனர். இந்த தீயால் வான் அளவிற்கு கரும்புகை எழுந்து வருவதால் , பொதுமக்கள்
மற்றும் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் , பெரும் அச்சத்தில் உள்ளனர்.மேலும் தீவிபத்து
குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கு.பாலமுருகன்







