தமிழகம் முழுவதும் தரைவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள பெல் புத்தாயிரம் பூங்கா வளாகத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் திருச்சி கோட்ட அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
கடந்த ஜனவரி மாதத்தில், தமிழகம் முழுவதும் நீர் வாழ் பறவைகள் கணக்கெடுக்கப்பட்டது. தொடர்ந்து தற்போது இன்றும், நாளையும் தரைவால் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இதில் திருவெறும்பூர் பகுதியில் உள்ள பெல் நிறுவன வளாகம் மற்றும் என்.ஐ.டி கல்லூரி உள்ளிட்ட கல்லூரி வளாகங்களில் இந்த கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது .
அதன் ஒரு பகுதியாக இன்று, திருச்சி திருவெறும்பூர், அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் வளாகப் பகுதியில் தரைவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியை திருச்சி வன கோட்டசார்பில் வன காப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மாவட்ட வன உதவி அலுவலர் சம்பத்குமார் தலைமை தாங்குகிறார். நாளை காப்புக்காடு பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கணக்கெடுப்பு பணியின் முக்கிய நோக்கம் பறவைகளின் வாழ்வியல் உணவு மற்றும் அயல் நாட்டு பறவைகள் கணக்கில் எடுக்கப்படும் பறவைகளால் தான் காடுகளின் பரப்பளவு பராமரிக்கப்படுகிறது.
திருச்சி வன கோட்டத்தில் உள்ள களப்பணியாளர்கள், வனசரகர்கள் கோபிநாத், தினேஷ், ரவி மற்றும் பலர் கணக்கெடுப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பெல் புத்தாயிரம் பூங்கா பகுதியில் எடுக்கப்படும் பறவைகள் கணக்கெடுப்பில் புன் முதுகு மரம் கொத்தி, பச்சை கிளி, தேன் சிட்டு, அரச வாழ் ஈபிடிப்பான், வாழ் காக்கை, மைனா, மணிப்புறா, கொண்டலவாத்தி, மயில், நீலவால் கிச்சன் உள்ளிட்ட பறவைகள் கணக்கு எடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.
– ம. ஸ்ரீ மரகதம்