விருதுநகர் அருகே கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கல்குவாரியில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பாறை உடைக்கும்…

விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கல்குவாரியில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பாறை உடைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கல்குவாரியில் எதிர்பாராத விதத்தில்  பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.  கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால் அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்தது.

இதையும் படியுங்கள் : டி20 உலகக் கோப்பை போட்டி : ஐபிஎல் போட்டியில் அதிரடி காட்டிய வீரர்களை களமிறக்கிய ஆஸ்திரேலிய அணி!

இந்நிலையில் கல்குவாரியில் பணியில் இருந்த தொழிலாளர்கள் 6 பேர் இந்த வெடி விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிகிடப்பதாகயும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்குவாரியில் இருந்த இரண்டு வாகனங்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளது.

மேலும்,  சில தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் அமைந்திருக்கும் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி  பொதுமக்கள் அந்த கல்குவாரியை மூடக் கோரி மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.