#Tenkasi | குற்றாலம் அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு – 2வது நாளாக குளிக்கத் தடை!

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்காசி…

#Tenkasi | Continued flooding in Kurdala falls - Bathing ban for 2nd day!

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (அக். 22) பெய்த தொடர் கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்குறிப்பிட்ட மூன்று அருவிகளிலும் நேற்று சுற்றுலா பணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதிக்கு வருகை தந்து அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை வரை விடிய விடிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இன்று இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க விடுத்துள்ள தடையை காவல்துறையினர் நீட்டித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.