காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அருகே உள்ள யாத்ரி நிவாஸ் பகுதியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அருகே உள்ள யாத்ரி நிவாஸ் பகுதியில் அமைச்சர் சேகர்பாபு நடத்திய ஆய்விற்கு பின் நடந்த செய்தியாளர்களை சந்திப்பில், காஞ்சிபுரம் கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்காக 2 ஏக்கர் நிலத்தில் பார்க்கிங் வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தங்கத் தேர் புதிதாக செய்யும் பணி குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை செய்யப்படும் எனவும் கூறினார். திருக்கோயில்கள் இருந்து வரும் வருமானம் அந்தந்த கோவிலுக்கு வழங்கப்படும், அவர்கள் அதை பக்தர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி தரபவும், திருப்பணிகள் மேற்கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் உள்ள 551 கோயில்களில் திருப்பணி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் அவர் தகவலளித்தார்.
இதையடுத்து பேசிய அவர், வருகின்ற புத்தாண்டு அன்று அனைத்து கோயில்களும் இரவு நேரத்தில் திறந்திருக்கும் எனவும் பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். இன்னும் இரண்டு கோணங்களில் யாத்ரி நிவாஸ் பகுதியில் ஆய்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.







