திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி ஸ்ரீஅழகிய நம்பிராயா் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோஸ்தவ வெகுச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோவில் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் அமைந்துள்ளது ஸ்ரீஅழகிய நம்பிராயர் திருக்கோயில்.புகழ்ப்பெற்ற 108 வைணவ திருத்தலங்களில் பாண்டிய நாட்டின் பெருமைமிகு தலமாக இக்கோயில் உள்ளது.இந்த திவ்ய தேசத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோஸ்தவம் விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டுக்கான பிரம்மோஸ்தவ விழா கடந்த 8ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஒவ்வொறு நாளிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் பக்தர்களுக்கு எழுந்தருளி காட்சியளிக்கிறார்.விழாவின் 7ம் நாளான இன்று மட்டையடி மண்டபத்தில் திருமஞ்சன சேவை நிகழ்வு நடைபெற்றது.இதற்காக நவ கலசங்கள் கொண்டு பூஜை செய்யப்பட்டது.
தொடா்ந்து சுவாமி மற்றும் தாயாருக்கு தைலக்காப்பு இடபட்டு பக்தா்களுக்கு வழங்கப்பட்டது. பிரபந்த கோஷ்டியர்களின் புருஷ சுத்தம்,ஸ்ரீ சுக்தம் உள்ளிட்டவை ஒதப்பட்டன.தொடர்ந்து சுவாமி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
சுவாமிக்கு கற்புர ஆரத்தி காட்டபட்டதும் திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயா் சுவாமிகளுக்கு பாிவட்டம் அணிவிக்கப்பட்டு சடாாி மாியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஆச்சாாா்ய புருஷா்கள் பிரபந்தம் சேவித்தனா். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து வருகின்றனர்.விழாவின் முக்கியமான நிகழ்வான தேரோட்டம் வருகிற வெள்ளிக்கிழமை 17ம் தேதி நடைபெற உள்ளது.
-வேந்தன்








