வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல் – புதுச்சேரியில் மார்ச் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமெடுத்துள்ள நிலையில், 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மார்ச் 16 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…

புதுச்சேரியில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமெடுத்துள்ள நிலையில், 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மார்ச் 16 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. ’இன்ஃபுளூயன்சா-ஏ’ வைரஸின் துணை வைரஸான ’H3N2’ வகையால் ஏராளமானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். புதுச்சேரியில் இந்த வைரஸுக்கு 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் பெரும்பான்மையாக சிறுவர், சிறுமியர்களையே தாக்குகிறது. உடல்நலக்குறைவு ஏற்படுவதால் அவர்களால் பள்ளிகளுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள் : ”வெறுப்பை தூக்கி கடாசிவிட்டு முன்னோக்கி போய் விடுங்கள்!” – செல்வராகவன் அட்வைஸ்

இந்நிலையில், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவி வருவதால், புதுச்சேரியில் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, நாளை (16.03.2023) முதல் 26.03.2023 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை புதுச்சேரி சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.