முக்கியச் செய்திகள் இந்தியா

சுட்டெரிக்கும் வெயில்: ஹீட் ஸ்டிரோக்கை தவிர்ப்பது எப்படி?

சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் ஹீட் ஸ்டிரோக்கில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

கோடைக்காலத்தில் கடும் வெயிலின் வெப்பத்தால் ஹீட் ஸ்டிரோக் எனும் வெப்ப பக்கவாதம் ஏற்படுகிறது. ஹார்ட் அட்டாக்கைப் போன்று வெப்ப பக்கவாதமும் பேராபத்தைக் கொண்டதுதான். நம் உடலில் உள்ள வெப்பநிலை மற்றும் பிஎச் எப்போதும் குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ரத்தத்தில் இருக்கும் ரசாயனங்கள் அனைத்தும் சரியாக வேலை செய்யும். வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது நம் உடல் உறுப்புகள் திடீரென தானாகவே செயலிழக்கத் தொடங்கிவிடும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்க: வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல் – புதுச்சேரியில் மார்ச் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

இயல்பாக இருக்கும்போதே சட்டென்று மயங்கிவிழுந்து இறந்துவிடும் நிலையை இந்த ஹீட் ஸ்டிரோக் ஏற்படுத்தும். கோடைக்காலத்தில் வெப்பம் தாங்காமல் பல உயிரழப்புகளும் இதுபோல் ஏற்படுகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 100-க்கும் மேற்பட்டோர் ஹீட் ஸ்டிரோக்கால் உயிரிழக்கின்றனர்.

உடல் சூடு அதிகரிப்பு, வேர்வையின்மை, வறண்ட சருமம், மூச்சுத் திணறல், மயக்கம், சோர்வு, குமட்டல், வாந்தி, தலைவலி, இதயத் துடிப்பு அதிகரித்தல், குழப்பம், எரிச்சல் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். இதுபோன்று தோன்றினால் காற்றோட்டமான பகுதிக்குச் செல்ல வேண்டும். தளர்வான ஆடைகளை உடுத்த வேண்டும். அதிக அளவிலான நீரைப் பருக வேண்டும். அப்படியும் சரியாகவில்லை எனில் உடனே மருத்துவரை அணுகலாம்.

பாதுகாப்பது எப்படி? :- தாகம் எடுக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். மோர், இளநீர், கூழ், பழச்சாறு போன்ற குளிர்ச்சியான பானங்களை எடுத்துக் கொள்ளலாம். முடிந்த அளவிற்கு பகல் நேரத்தில் மதுபானம், தேநீர், காபி, கார்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும்போது தொப்பி அல்லது குடையைப் பயன்படுத்தலாம்.

முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சூரிய ஒளியைத் தவிர்க்க வேண்டும். உணவு விநியோகம் செய்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதிப்படுத்திக் கொள்ள் வேண்டும். இந்த வழிமுறைகளை சரியாகப் பின்பற்றினால் ஹீட் ஸ்ட்ரோக் நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“விவசாயிகள் நலனே பிரதானம்” -பிரதமர் மோடி

G SaravanaKumar

’ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்’

Arivazhagan Chinnasamy

கூட்டுறவுத்துறை குறித்த விமர்சனம்; திமுக அமைச்சர்கள் இடையே கருத்து மோதல்

EZHILARASAN D