அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், கோயில்களை சுத்தம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் கோயில்களை சுத்தம் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கொடிமரம், டிக்கெட் வழங்கும் கவுன்டர்கள் மற்றும் பக்தர்கள் செல்லும் வழி தடங்களில், கிருமி நாசினி, புளிக்கரைசலை கொண்டு சுத்தம் செய்யும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், பல்வேறு கோயில்கள் மற்றும் பள்ளிவாசல்களை சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்