தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்து பொங்கலுக்கு தெலுங்கில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் முதல் நாளில் ரூ.54 கோடியை வசூல் செய்துள்ளது. இதன் மூலம் அஜித் மற்றும் விஜய்யை பின்னுக்கு தள்ளி பாலகிருஷ்ணா சாதனை படைத்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு உள்ளிட்ட படங்கள் தமிழில் வெளியாகின. அதேபோல தெலுங்கில் பாலகிருஷ்ண நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் கடந்த 12ம் தேதி வெளியானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், துனியா விஜய் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இசையமைப்பளர் தமன் இசை அமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது. திரைக்கு வந்த தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலை படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் முதல் நாளில் 54 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தமிழில் வெளியாகிய அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்களின் முதல் நாள் வசூலை பின்னுக்குத் தள்ளி பாலகிருஷ்ணா சாதனை படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.